இன்று முதல் காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

இன்று முதல் காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
X

காட்பாடி ரயில்வே பாலம் 

Railway Arch Bridge - காட்பாடி ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்று முதல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

Railway Arch Bridge -காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிக்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முழுமையாக முடிவுற்றதையடுத்து பாலத்தின் உறுதித்தன்மை குறித்து போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இன்று திறந்து வைத்தார் .

இதன் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் இன்று முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இயங்க மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது . சரக்கு வாகனங்களை பாலத்தின் மீது இயக்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story