வேலூர் மாவட்டத்திற்கு ரயில், பஸ், கார்களில் சுற்றுலா வருவதற்கு அனுமதியில்லை

வேலூர் மாவட்டத்திற்கு ரயில், பஸ், கார்களில் சுற்றுலா வருவதற்கு  அனுமதியில்லை
X

மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன்

அவசியத்தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தொற்றுபரவலை கட்டுப்படுத்த முடியும்

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு பேருந்து, இரயில் மற்றும் இதரவாகனங்கள் மூலம் சுற்றுலா வருவதற்கு பயணிகள் யாருக்கும் அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு பேருந்து, இரயில் மற்றும் இதரவாகனங்கள் மூலம் சுற்றுலா வருவதற்கு பயணிகள் யாருக்கும் அனுமதியில்லை .இதுதொடர்பாக மாவட்ட எல்லைகளில் வேலூர் மாவட்ட காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் கடைக்கு வந்தால் அவர்களுக்கு எவ்வித பொருட்களும் விற்பனை செய்யக் கூடாது.மேலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்திகை கழுவியும், சமூக இடைவெளி தவறாமல் கடைபிடித்தும், அவசியத் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்நோய் தொற்றுபரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.


Tags

Next Story