வேலூர் நெடுஞ்சாலை பள்ளத்தில் டிரெய்லர் லாரி சிக்கியது

வேலூர் சத்துவாச்சாரியில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆர்டிஓ சாலை சந்திப்பில் சாலையை கடக்கும் பொது மக்கள் , இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது . இதனால் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு இருசக்கரம் மற்றும் சிறிய வாகனங்கள் , பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது .
இந்நிலையில் சுரங்கப்பாலத்துக் காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டிரெய்லர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மழையின் காரணமாக சிக்கிக்கொண்டது. இதனால் அங்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன . போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது .
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சர்வீஸ் சாலைக்கு போக்குவரத்தை திருப்பிவிட்டனர் . தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினர் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது . இதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தொடங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu