/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்: வேலூர் கலெக்டர் தகவல்

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்: வேலூர் கலெக்டர் தகவல்
X

வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நடைபெற்றது

காதுகேட்காத, வாய்ப்பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்குகிறது.

இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகம் உள்பட மாவட்டத்தில் 4 இடங்களில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நேர்காணலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்த நேர்காணலில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடைய விண்ணப்ப மனு பரிசீலிக்கப்பட்டது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் போன் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில், வேலைசெய்யும் மற்றும் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் செல்போன் வழங்கப்படும்.

மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த நேர்காணலில் 192 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் செல்போன் வழங்கப்படும் என்றனர்.

Updated On: 12 March 2022 3:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  2. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  3. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  4. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  5. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  7. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  9. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  10. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!