குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை

குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை
X

வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன்  

சென்னையில் நடைபெற்ற 73வது குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வந்துள்ளது

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி, " விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இன்று மாலை வேலூர் வந்தடைந்தது.

வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே கூத்தபாக்கம் என்ற பகுதியில் அலங்கார ஊர்தி வந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி .விஜயா,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா,மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று அலங்கார ஊர்தியை மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.

இந்த வாகன ஊர்தி நாளை அணைக்கட்டு ஒன்றியம், கழனிபாக்கம் ஊராட்சி மற்றும் காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, வள்ளிமலை பகுதியிலும் பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் கொரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare