/* */

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. திருடனாக மாறிய இளைஞர்...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணுக்கு பரிசு வழங்க ஆசைப்பட்டு பக்கத்து வீட்டில் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. திருடனாக மாறிய இளைஞர்...
X

திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் ராஜ்குமார்.

வேலூர் மாவட்டம், சித்தேரி பகுதியில் உள்ள குமரவேல்நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், மகா சிவராத்திரியை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கடந்த 18 ஆம் தேதி இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாதநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார் இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிந்த போலீஸார் அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கருப்பு உடையுடன் சிவப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பை கொண்ட ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் யார்? என்று அடையாளம் தெரியாத நிலையில், போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) என்பவராக இருக்கலாம் என போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது.

அவர், ஏற்கெனவே அடிதடி வழக்கில் அரியூர் காவல் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. அதேநேரம், நரேஷ்குமார் வீட்டில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தாராம்.

மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து முறைப்படி விசாரித்ததில் அர்ஜூன் ராஜ்குமார் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாராம்.

இதைத்தொடர்ந்து நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையையும், குல்லாவையும் பறிமுதல் செய்தார்.

திருட்டு தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியது தெரியவந்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய கோவை பெண் தோழிக்கு பரிசுகளை வழங்குவதற்காக வீட்டில் திருடியதாக அர்ஜூன் ராஜ்குமார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 22 Feb 2023 4:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது