குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
X

வேலூரில் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

குழந்தைகளை நியுமோ கோக்கல் நிமோனியா பாக்டீரியா பெரும்பாலும் பாதிக்கிறது . இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும் . மேலும் சுவாசத்துளிகள் மூலம்பரவும் இத்தொற்று கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் . இதனால் அனைத்து அரசு மருத்து வமனைகளிலும் நியுமோ கோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி வழங்க தமிழக அரசுசார்பில் முடிவெடுக்கப்பட்டது .

இந்த தடுப்பூசி முகாம் கடந்த வாரம் சென்னையில் தொடங்கப்பட்டது . இந் நிலையில் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது .

அதன்படி ஒரு ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 969 குழந்தைளுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் குழந்தைகளுக்கும , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 820 குழந்தைகளுக்கும் போடப்பட உள்ளது . அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது .

தனியார் மருத்துவமனையில் இந்த தடுப்பூசியின் விலை ரூபாய்12 ஆயிரம். தமிழக அரசு சார்பில் இலவசமாக குழந்தைகளுக்கு போடப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமாக போடப்படும் தடுப்பூசியுடன் சேர்ந்து இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil