பிளஸ் 2 துணைத்தேர்வு 16 மையங்களில் நடத்த முடிவு:அதிகாரிகள் தகவல்
வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வை 16 மையங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
தமிழகத்தில் கொரோனா 2 ம் அலை காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது . இதில் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும், தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டது .
மேலும் பிளஸ் 2 துணை தேர்வு வரும் 6 ம்தேதி தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது .
வரும் 6 ம்தேதி மொழிப்பாடம் ,
9 ம்தேதி ஆங்கிலம் ,
11ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ,
13ம் தேதி வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல்
16ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் டிரஸ் டிசைனிங், நியூட்ரிஷியன், புட்சர்வீஸ் மேனேஜ் மென்ட், வேளாண்அறிவியல், நர்சிங்,
18ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை ,
19ம் தேதி கம்ப் யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்டரி, ஹோம்சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள் நடைபெற உள்ளது .
இந்நிலையில், துணைத்தேர்வுக் கான தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதும் தேர்வாளர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 4 மையங்கள் என மொத்தம் 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தயார் நிலையில் இருக்குமாறு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu