விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
X

விநாயகர் சதுர்த்தியொட்டி பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்  

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி யொட்டி பூஜை பொருட்கள் வாங்க இன்று காலை முதலே திரண்ட பொதுமக்கள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம் . பின்னர் போலீசார் அனுமதி அளிக்கும் நாளில் ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று அந் தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பார்கள் .

ஆனால் கடந்தாண்டை போல், இந்தாண்டும் , கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும், அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று காணப்படும் உற்சாகம் இந்த ஆண்டு காணப்படவில்லை.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நாளை வீடுகளில் சிலைகள் வைத்து பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூரில் இன்று விநாயகர் சிலைகள் விற்பனை ஜோராக நடை பெற்றது. பொதுமக்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய வடிவிலான சிலைகளை வாங்கிச்சென்றனர் . மேலும் பூஜைக்கு தேவையான பழவகைகள், வாழை இலை, விளாங்காய் , நிலக்கடலை மற்றும் சிறிய வண்ண வண்ண குடைகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாங்கினர் . இதனால் வேலூர் பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிகளிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது . இதன் காரணமாக பூக்கள், பழங்கள் உள்பட அனைத்து பூஜை பொருட்களின் விலையும் அதிகரித்திருந்தது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!