பொது பிரச்சினைகளுக்கு மக்கள்நீதி மன்றத்தை அணுக வேலூர் நீதிபதி தகவல்

பொது பிரச்சினைகளுக்கு மக்கள்நீதி மன்றத்தை அணுகலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா கூறியுள்ளார்.
பொதுபயன்பட்டு சேவைகள் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதாவது, தரைவழி, ஆகாய வழி, நீர்வழி மூலம் பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி, தொலைபேசி, மின்சாரத்துறை, குடிநீர் வழங்கல் துறை, காப்பீடு துறை மருத்துவமனை, மருந்தகம், வீடு, ரியல் எஸ்டேட் சம்பந்தமான சேவைகள், கல்வித்துறை தொடர்பான சேவைகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம்.
வேலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றம் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் எதிரில் அமைந்துள்ள மாற்றுத்தீர்வு மைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தை பொதுமக்கள அனைத்து வேலை நாட்களிலும் அணுகலாம்.
பொதுப்பிரச்சினைகள் யாருக்காவது ஏற்பட்டால் குறைகளை விளக்கமாக மனுவில் எழுதி மக்கள் நீதிமன்றத்துக்கு நேரில் வந்தோ, தபால் மூலமாகவோ அனுப்பி, நீதிமன்றத்தை அணுகாமலே உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் மீது கீழமை நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய இயலாது.
உயர்நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். மக்கள் நீதிமன்றத்தில் பெறப்படும் மனுவில் கூறப்படும் பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்க கூடாது. இதன் தலைவராக மாவட்ட நீதிபதி அருணாச்சலம் பொறுப்பு வகித்து வருகிறார். மக்கள் நீதிமன்ற அலுவலகத்தை 0416-2255599 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu