வேலூரில் அதிக ஆர்வமுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பெண் வேட்பாளர்கள்

வேலூரில் அதிக ஆர்வமுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பெண் வேட்பாளர்கள்
X

வேலூர் மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் 

வேலூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுக, திமுக சுயேட்சைகள் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பத்து வார்டுகளை உள்ளடக்கிய 1-வது மண்டலத்தில் இன்று திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.

முன்னதாக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாநகராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புடைசூழ மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து 1-வது மண்டலம் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு தங்களது வேட்புமனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் குமரனிடம் தாக்கல் செய்தனர்.

மேலும் 60 வார்டுகளிலும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். குறிப்பாக அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அனைத்து வார்டுகளிலும் பெண் வேட்பாளர்கள் இன்று அதிக அளவில் வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கலையொட்டி பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future