புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை: கலெக்டர் அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை:  கலெக்டர் அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் 

தொற்று பரவல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் குமாரவேல் கூறியுள்ளார்

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொது இடங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் கேட்டுகொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்,

மாவட்டத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஒமிக்ரான் வகை தொற்றானது பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2021 அன்று இரவு நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future