வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள்
மாதிரி படம்
வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்டியன்பேட்டை, முத்தரசிக்குப்பம், பத்திராப்பள்ளி, சயனகுண்டா மற்றும் பரதாரமி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. இங்கு ஏற்கனவே சாதாரண சிசிடிவி கேமராக்கள் உள்ளன, 24 மணி நேரமும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.
தற்போது இந்த சோதனை சாவடிகள் வழியாக மணல் கடத்தல் மற்றும் திருட்டு வாகனங்களில் சென்றால் கண்டுபிடிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்த உள்ளனர்.
இந்த கேமராக்கள் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட்களை படம் பிடிப்பது மட்டுமல்லாமல், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி காட்சிகள் வழங்கும்.
ஒவ்வொரு ஏ.என்.பி.ஆர். கேமராவும் 15 நாட்கள் சேமிப்பு திறன் கொண்டது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் குறைந்தது 2 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள், குறிப்பாக மாவட்ட காவல்துறை தலைமையகத்தில், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்கள் குறித்து எச்சரிக்கும். இந்த கேமராக்களின் ட.வி.ஆர். யூனிட்டில் வாகனங்களின் கருப்புப் பட்டியல் மற்றும் வெள்ளைப் பட்டியல் ஆகிய 2 வகையான பட்டியல்களைக் கொண்ட புதிய மென்பொருள் பதிவேற்றப்பட்டுள்ளது.
கருப்பு பட்டியலில் திருடப்பட்ட மற்றும் காணாமல் போன வாகனங்களின் விவரங்கள் உள்ளது. மற்ற அனைத்து வாகனங்கள்வெள்ளை பட்டியல் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் படம்பிடிக்கும். கருப்பு பட்டியலில் உள்ள வாகனங்கள் சிக்கினால், கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தானியங்கி எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும், இது அந்தந்த பகுதியில் உள்ள ரோந்து போலீசாருக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
மேலும் ஆந்திராவுக்கு மணல் உள்ளிட்டவற்றை கடத்தலை முழுவதிலும் தடுக்க முடியும். தற்போது, மாவட்டத்தில் 200 சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் துறை பராமரிக்கிறது. இந்த கேமராக்களுக்கு அடையாள எண்களை வழங்கும் பணி நடந்து வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu