உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
X

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக கவசம், கிருமி நாசினி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

நாளை(பிப்.19) நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக கவசம், கிருமி நாசினி மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். இதில், வேலூர் மண்டல காவல்துறை துணைத்தலைவர் முனைவர் ஆனி விஜயா , மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!