வேலூரில் தமிழ்நாடு நில அளவையாளர்கள் சங்க முப்பெரும் விழா

வேலூரில் தமிழ்நாடு நில அளவையாளர்கள் சங்க முப்பெரும் விழா
X

வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவையாளர்கள் சங்க முப்பெரும் விழா

வேலூரில் தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.

முத்துச்செல்வி, பெருமாள், காயத்ரி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, தமிழ்நாடு நில அளவைத் துறையில் ஆன்லைன் பட்டா முறையில் தள்ளுபடி இனங்கள் மூலம் மறைமுகமாகவும் நேரடியாகவும் களப்பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு உரிய தீர்வு காணப்பட கூட்டு பட்டா முறையை நில அளவர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நில அளவை துறையில் திட்டப்பணியில் நீண்ட காலமாக நில அளவர்கள் சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் சென்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு நில அளவைத் துறையில் களப்பணியாளர்களின் கூடுதல் இயக்குநர் பதிவு உயர்வு முதல் உதவி இயக்குநர் பதிவு உயர்வு வழங்குவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. இதனால் விதிகளை தளர்த்தி பதிவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

நில அளவைத் துறையில் களப்பணியாளர்கள் ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் போல தள்ளுபடி இடங்களை கிராம நிர்வாக அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என இயக்குநர் உத்தரவிட வேண்டும்.

சங்கத்தின் சார்பில் இதுவரையில் துறை தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கதிரேசன், வேலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசன்னா திருப்பத்தூர் சந்திரசேகர் ராணிப்பேட்டை ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story