பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X
உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி அம்முண்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மூண்டி பகுதியில் 2,045 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது அங்கு ஊராட்சி மன்றத் தலைவிக்கான உள்ளாட்சித் தேர்தல் தனித்தொகுதி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 3 பெண்கள் தான் அந்த தகுதியை பெற்றுள்ள வாக்காளர்களாவர்.

எதற்காக இந்த கிராமத்தை தனித்தொகுதி பெண் வேட் பாளர்களுக்கான கிராமமாக அறிவித்தார்கள் என்றும், எங்கள் பகுதி பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி இன்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு­வார்த்தை நடத்தி அனைவரையும் கலையச் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!