வேலூரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.

வேலூரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.
X
வேலூரில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 06ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கும் முறை குறித்தும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் அந்தந்த தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேலூரில் மாவட்டம் உள்ள காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம், தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே உள்ள ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரி வாக்கு பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!