காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக துரைமுருகன் வேட்புமனு தாக்கல்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது வேட்புமனுவை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் தாக்கல் செய்தார். அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் உடனிருந்தார். முன்னதாக செங்குட்டையில் இருந்து கட்சியினருடன் ஊர்வலமாக சென்று காட்பாடியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
காட்பாடி தொகுதியில் 10 -வது முறையாக துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். காட்பாடி தொகுதியில் மட்டும் 7 முறை எம்.எல்.ஏவாக உள்ளார். மொத்தமாக 12 முறை வேட்பு மனு தாக்கல் செய்து 10 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில். தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதி கதாநாயகன், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன். தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது இப்படியும் திருடர்கள் வரலாம் என்பதை காட்டுகிறது.
தி.மு.க வெற்றி சிறகடித்து நாங்கள் வெளியில் வருவோம் என கூறினார். தி.மு.க எம்.எல்.ஏ சரவணன் பா.ஜ.கவில் இணைந்தது குறிதேது கேட்டதற்கு தேர்தல் சமயத்தில் இது போன்று எல்லாம் நடக்கும் இது சாதாரண விஷயம். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்றுகளை நிறைவேற்றிவிட்டால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள். பதவி என்பதை பெரியதாக கருதாமல் மக்களுக்கு சேவையாற்று வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதுவார்களோ அவர்கள் சிறந்த எம்.எல்.ஏவாக இருப்பார்கள். நான் அப்படி தான் நினைக்கிறேன் என துரைமுருகன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu