100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடியில் விழிப்புணர்வு மாரத்தான்

வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் 200 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டியை இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான், சித்தூர் பேருந்து நிலையம் முதல் வேலூர் கிரீன் சர்க்கிள் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்ட பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து எதிர்காலத்தில் மாணவர்கள் நலமுடன் வாழவும் மிக உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அலுவலர் ஆலி வாசன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில் குமரன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu