காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

காட்பாடி வழியாக சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி வழியாக செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் டேப்ராத் சத்பதி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் காட்பாடி வழியாக சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர்.

இதில் இருக்கைகளுக்கு கீழே சிறு சிறு மூட்டைகளாக 30 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை திருவலத்தில் உள்ள வாணிப நுகர்வோர் கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு