காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
X

பொன்னையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

பொன்னையில் பட்டா மாறுதலுக்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; விவசாயி. அதே பகுதியில், அவரது தந்தை பெயரில் உள்ள பூர்வீக வீட்டை, தன் பெயரில் பட்டா மாற்ற, பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதா என்பவரிடம் மனு கொடுத்தார்.பட்டா மாற்றம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கவிதா கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த கவிதாவிடம் நேற்று, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். கவிதா பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!