காட்பாடி தொகுதியில் துணை ராணுவப்படை மற்றும் காவல் துறை கொடி அணிவகுப்பு.

காட்பாடி தொகுதியில் துணை ராணுவப்படை மற்றும் காவல் துறை கொடி அணிவகுப்பு.
X
சட்டமன்ற தேர்தலையொட்டி காட்பாடி தொகுதியில் துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி காட்பாடி தொகுதியில் துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

எதிர்வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி பொது மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் காட்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், துணை ராணுவத்தினர் 60 பேர், தமிழக காவல் துறையை சேர்ந்த ஆயுதப்படையினர், சிறப்பு காவல் படையினர், ஊர்காவல் படையினர் என சுமார் 250 பேர் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய கொடி அணி வகுப்பு ஓடைபிள்ளையார் கோவில், சில்க் மில் பேருந்து நிறுத்தம், வள்ளிமலை கூட் ரோடு வழியாக சென்று மீண்டும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!