காட்பாடி சர்க்கார் தோப்பு சோலார் பிளாண்ட் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்

காட்பாடி சர்க்கார் தோப்பு சோலார் பிளாண்ட் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்
X

காட்பாடி சர்க்கார் தோப்பு சூரிய மின்திட்டம்

காட்பாடி சர்க்கார் தோப்பில் அமைந்துள்ள சோலார் பிளாண்ட் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் 2.3 கோடி மின் கட்டணம் மிச்சமாகும்

வேலூர் மாநகராட்சியில் மத்திய , மாநில அரசுகளின் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக் கீட்டில் ஸ்மார்ட் சாலை , ஸ்மார்ட் பூங்கா , பாதாள சாக்கடை திட்டம் உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதில் மாநகராட்சி முழுவதும் மின்சார பயன்பாட்டினை குறைத்து சோலார் பிளாண்ட் மூலம் மின்செலவினை மிச்சப்படுத்த முடிவு செய்யப்பட்டது .

அதன்படி வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோப்பில் 7 ஏக்கர் பரப்பளவில் , சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது . இதன்மூலம் தினமும் 11 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் . இதன்மூலம் ஆண்டுக்கு மாநகராட்சிக்கான மின்கட்டண செலவு ரூபாய் 2.3 கோடி வரையில் மிச்சமாகும் . மாநகராட்சியின் தேவைக்கு போக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படும். இல்லாவிட்டால் அதற்கான தொகை பெறப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதுகுறித்து அதிகாரி கள் மேலும் கூறுகையில் , வேலூர் மாநகராட்சி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சோலார் பிளாண்ட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது . தற்போது மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந்த பணிகள் முடிவடைந்தவுடன் , இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் . இதன்மூலம் மாநகராட்சி மின் கட்டண செலவு ஆண்டுக்கு ரூபாய் 2.3 கோடி மிச்சமாகும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!