காட்பாடி தொகுதி இனி அதிமுக தொகுதியாக மாறும்

காட்பாடி தொகுதி இனி அதிமுக தொகுதியாக மாறும்
X
காட்பாடி தொகுதி இனி அதிமுக தொகுதியாக மாறும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 1 லட்சத்தி 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்- காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமு வேட்புனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் V.ராமு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காட்பாடி தொகுதி இனி அதிமுக தொகுதியாக மாற இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிமுக அரசின் பல்வேறு திட்டங்கள், தற்போதைய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்ற பின் தொகுதி பக்கம் வராதது. தொகுதிக்கான திட்டப்பணிகளை நிறைவேற்றாதது போன்றவை அதிமுகவுக்கு சாதகமாக அமையும். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். இதுவரை எந்த நலதிட்டத்தையும் செய்யவில்லை என்ற குறை உள்ளது. நான் தேர்வு செய்யப்பட்ட உடன். காட்பாடி தொகுதியில் அரசு மருத்துவமனை, அரசு கலை கல்லூரி, போக்குவரத்தை குறைக்க புதிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன். மேலும் 1 லட்சத்தி 50 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!