வேலூரில் போலீசார் மீது கற்களை வீசிவிட்டு லாரியில் தப்பிய கொள்ளை கும்பல் சிக்கியது

வேலூரில் போலீசார் மீது கற்களை வீசிவிட்டு லாரியில் தப்பிய கொள்ளை கும்பல் சிக்கியது
X
வேலூரில் போலீசார் மீது கற்களை வீசிவிட்டு லாரியில் தப்பிய கொள்ளை கும்பல் சிக்கியது ஆர்.கே.பேட்டையில் போலீசார் சுற்றி வளைத்தனர்

வேலூர் மாநகராட்சி எல்லையான புதுவசூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சத்துவாச்சாரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எதிரே நெடுஞ்சாலையோரம் குஜராத் பதிவு எண் கொண்ட லாரி ஒன்று சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தது . இதையடுத்து லாரியின் அருகில் சென்று போலீசார் பார்த்த போது, லாரியில் இருந்த மர்ம ஆசாமிகள் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றனர். வேலூரை நோக்கி சென்ற லாரியை போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டிச்சென்றனர் . அப்போது லாரியில் இருந்த மர்ம ஆசாமிகள், போலீசார் மீது கற்களை சரமாரி வீசினர் . தொடர்ந்து , காட்பாடி வழியாக லாரி சென்றதால் காட்பாடி, விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

அவர்கள் , சாலையின் குறுக்கே பேரிகார்டுகளை வைத்து தடுக்க முயன்றனர் . ஆனால் அவற்றை இடித்து தள்ளிவிட்டு சென்ற லாரி, போலீஸ் ஜீப்பையும் இடித்துவிட்டு, பொன்னை வழியாக சென்றது . சுமார் 65 கி.மீ. தூரம் போலீசார் விரட்டிச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து டிஎஸ்பி பழனி தலைமையில் , இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அந்த கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர் .

இதற்கிடையில், வேலூரில் போலீசாரை கற்களால் தாக்கிவிட்டு தப்பிய கும்பல் ஆர் .கே.பேட்டை அருகே காட்டூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு சென்று மறைந்திருந்த மர்ம ஆசாமிகளை பிடித்து விசாரணை நடத்தினர் . இது குறித்து தகவலறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ஆர்.கே.பேட்டைக்கு விரைந்தனர் .

மர்ம ஆசாமிகளை காட்பாடிக்கு அழைத்து வந்த விசாரணை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர் . இந்த விசாரணையில் அவர்கள் ஏடி எம் கொள்ளையர்களா, அல்லது மாடு திருடும் கும்பலா, அல்லது வேறு ஏதாவது குற்றச்சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா என விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!