காட்பாடி அருகே பாத்திரக் கடையில் தீ விபத்து

காட்பாடி அருகே  பாத்திரக் கடையில் தீ விபத்து
X
காட்பாடி அருகே வள்ளி மலை சாலையில் உள்ள பாத்திரக்கடையில் தீ விபத்து. பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதம்

காட்பாடி வள்ளி மலை சாலையில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பாத்திரக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்றிரவில் வியாபாரத்தை முடித்து விட்டு கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். கடையையொட்டி ஒரு குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் பெயிண்ட் டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை கடை மற்றும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனையடுத்து காட்பாடி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து சேதமானது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!