வேலூர் , காட்பாடி உழவர் சந்தைகளில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

வேலூர் , காட்பாடி உழவர் சந்தைகளில் கலெக்டர்  குமாரவேல்பாண்டியன் ஆய்வு
X

வேலூர் , காட்பாடி உழவர் சந்தைகளில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்  

வேலூர் , காட்பாடி உழவர் சந்தைகளை இன்று ஆய்வு செய்த கலெக்டரிடம் , கிராமங்களுக்கு பஸ்கள் சரியாக வருவதில்லை என்று புகார் தெரிவித்தனர்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வேலூர் டோல்கேட் பகுதி மற்றும் காட்பாடியில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது . இந்நிலையில் கலெக்டர் குமார வேல்பாண்டியன் இன்று உழவர் சந்தைகளை ஆய்வு செய்தார் . அப்போது , விவசாயிகளுக்கு போதுமான அளவு அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா ? விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி உள்ளதா போன்றவை குறித்து கேட்டார் .

அதற்கு விவசாயிகள் , கிராமங்களில் இருந்து வரும் பஸ்கள் குறிந்தநேரத்தில் வருவது இல்லை . எங்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் . பூ வியாபாரத்திற்கு இடம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது : வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது . அதன் பயன்பாடு எவ்வாறு உள்ளது, அங்கு வரக்கூடிய வேளாண் பெருமக்களின் குறைகளை அறிந்து கொண்டேன் .

மேலும் காய்கறிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டுமா ? என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் , வோளண்மை துறை , வேளாண்மை விற்பனைத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது . இதில் ஒரு சில திருத்தங்கள் கூறி உள்ளேன் . விவசாயிகள் தேவையான பஸ் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . உழவர் சந்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி விட்டு அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் . உழவர் சந்தை அருகே நிறுத்தப்படும் இருச்சக்கர வாகனங் கள் திருட்டு போவதை தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் , 2 வாட்ச்மேன்கள் நியமித்து வாகனங்கள் திருட்டு போகாதவாறு தடுக்கப்படும் என்று அவர் கூறினார்

இந்த ஆய்வின்போது கமிஷனர் சங்கரன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்