/* */

15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்

காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கான  தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்
X

காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

தமிழக அரசு அறிவித்த 2007 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்த 15 வயது -18 வயது வரை உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் என்ற அறிவிப்பை அடுத்து இன்று காட்பாடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

இதில் 15 வயது முதல் 18 வயது உடைய மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது இம்முகாமினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசியை செலுத்திகொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, கேவிகுப்பம், அணைக்கட்டு வேலூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் முழு ஏற்பாடுடன் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 15- 18 வயது வரையில் உள்ள மாணவர்கள் 71500 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமைக்குள்ளாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார்.

Updated On: 3 Jan 2022 12:31 PM GMT

Related News