கழிஞ்சூர் ஏரியில் செயற்கை தீவு அமைத்து படகு சவாரி: அமைச்சர் துரைமுருகன்

கழிஞ்சூர் ஏரியில் ரூ.25 கோடியில் செயற்கை தீவு அமைத்து படகு சவாரி விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்

பருவமழை காரணமாக வேலூர் பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றில் இருந்து பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து சுமார் 100 கன அடி தண்ணீர் கோடி போனது.தண்ணீரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு தண்ணீரில் மலர்தூவி வரவேற்றார். பின்னர் அவர் பேசியதாவது:-

கழிஞ்சூர் ஏரி நிரம்பி கோடி போகும் இடத்தில் மதி நகர் சாலையில் மேம்பாலம் கட்டப்படும். கழிஞ்சூர், காட்பாடி ஏரிகளிலிருந்து கடந்த காலங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இங்கு விவசாயம் இல்லை. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். உப்பு நீர் நல்ல நீராக மாற வாய்ப்பிருக்கிறது.

இந்த ஏரிகளை மேம்படுத்த எ கரைகளை பலப்படுத்த வேண்டும்‌ என அதிகாரிகள் கூறினர். மேலும், கழிஞ்சூர் ஏரியின் நடுவில் செயற்கை தீவு அமைத்து, படகு சவாரி விட்டால் ஏழை மக்கள் பொழுதுபோக்க வசதியாக இருக்கும். ஏரிக்கரைகளில் சிமெண்டு தளங்கள் அமைத்தால் அதில் நடை பயிற்சி செல்லமுடியும் எனவும், இதற்கு ரூ.25 கோடி செலவாகும் என கூறினர். விரைவில் அதற்கான நிதியை பெற்று தருவேன் இவ்என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மண்டல குழு முன்னாள் தலைவர் சுனில் குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story