சுடுகாடு இடித்து தரைமட்டம்- பொதுமக்கள் புகார்

சுடுகாடு இடித்து தரைமட்டம்- பொதுமக்கள் புகார்
X

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த புதூர் மேடு மகிமண்டலம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாடு தரைமட்டமாக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த புதூர் மேடுமகி மண்டலம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் சுடுகாடு இடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் சுடுகாடு இடம் தனக்கு சொந்தமானது என கூறி சுடுகாடு முழுவதும் புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கி உள்ளார். இதில் சமாதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அழுதனர். மேலும் மோகனிடம் சுடுகாடு உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என கூறியுள்ளனர். ஆனால் மோகன், இது தனக்கு சொந்தமான இடம் என்று அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதனால் கிராம மக்களுக்கும் மோகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மேல்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags

Next Story