வெடிகுண்டு மிரட்டல்: இரயில் நிலையத்தில் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல்: இரயில் நிலையத்தில்  தீவிர சோதனை
சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் காட்பாடி இரயில் நிலைய சந்திப்பில் தீவிர சோதனை நடந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(பிப்-27) சென்னை சென்ரல் இரயில் நிலையத்திற்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலைய சந்திப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்பாடி இருப்பு பாதை இரயில்வே காவல் துறையினர் இன்று(பிப்-28) காட்பாடி இரயில் நிலையத்தில் ஜூலி மற்றும் ஜேக் ஆகிய இரு மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள், இரயில் நிலைய நடைமேடை மற்றும் வெளி வளாகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story