தேசிய அளவிலான வாலிபால் போட்டி
16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 43 வது தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் வேலூர் அடுத்த காட்பாடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று துவங்கிய இப்போட்டி பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெறும். இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, மிசோராம், ஒடிசா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் குழுவும், 17 மாநிலத்தை சேர்ந்த பெண்கள் குழுவும் கலந்து கொண்டுள்ளது.
வேலூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பாக நடத்தப்படும் இப் போட்டியில், சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை தேர்வு செய்து கேலோ இந்தியா (Khelo India) எனும் விளையாட்டு மேம்பாட்டிற்கான தேசிய திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய அணிக்காக விளையாடக்கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu