உதவி பேராசிரியர்கள் ஆர்பாட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தகுதி பெற்ற கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பின்னர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்தனர். அதில் தமிழ்நாடு தகுதி பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் பல்கலைக்கழக மானிய குழு விதித்துள்ள முழு தகுதிகளையும் பெற்று உதவி பேராசிரியர்களாக மாநிலம் முழுவதும் தனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளுக்கு இதன் மூலம் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் முறைகேடாக உயர் கல்வித்துறை நேரடி நியமனம் இல்லாமல் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களை பணி வரன் முறைபடுத்துகிறோம் என்று தற்போது சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் 48 ஆயிரம் பேர் உதவி பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கும் பணி கிடைப்பது இதன் மூலம் தடுக்கபடும் எனவே அனைவருக்கும் சம வாய்ப்பை அரசு வழங்க வேண்டும். சமூக நீதிக்கு எதிராக பணியமர்த்தப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை பணி வரன் முறைப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானதாகும் எனவே கௌரவிரிவுரையாளர்கள் பணி வரன் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் அனைவருக்கும் சம வாய்ப்பை அரசு கல்லூரிகளில் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu