public request more no of buses to tirupati வேலுார் -திருப்பதி இடையே அதிக பஸ்களை இயக்க பக்தர்கள் கோரிக்கை:அதிகாரிகள் நடவடிக்கை தேவை

public request more no of buses to  tirupati  வேலுார் -திருப்பதி இடையே அதிக பஸ்களை  இயக்க பக்தர்கள் கோரிக்கை:அதிகாரிகள் நடவடிக்கை தேவை
X

வேலுார்-திருப்பதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (கோப்பு படம்)

public request more no of buses to tirupati தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

public request more no of buses to tirupati

தமிழகத்தில் வேலுார்-திருப்பதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமலைக்கு செல்லும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் பஸ்களில் சென்று வருகின்றனர். அவரவர்களின் வசதி வாய்ப்புக்கு ஏற்ப பலர் காரிலும், ஒரு சிலர் ரயில்களிலும். ஒரு சிலர் சொகுசு பஸ்களிலும் பயணம் செய்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் கிராமப்புறங்களிலிருந்து செல்பவர்கள் அரசு பஸ்களை நம்பித்தான் தங்கள் திருப்பதி பயணத்தினையே திட்டமிடுகின்றனர்.

முக்கிய நாட்களில் திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பதாலும் அரை மணி நேர இடைவெளி இருப்பதாலும் கூட்டத்தினைப் பார்த்துவிட்டு வயதானோர், சிறுவர், சிறுமியருடன் பயணம் செய்பவர்கள் ஒவ்வொரு பஸ்சாக விட்டுவிட்டு பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையையே அனுபவதித்துவருகின்றனர்.

அதுவும் திருமலையில் தர்ம தரிசனத்திற்காக பல மணிநேரம் காத்திருந்துவிட்டு எப்போடா? ஊர் திரும்புவோம் என களைத்து வருபவர்களுக்கு திருப்பதி அடிவாரத்தில் வேலுார் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையே தொடர்கிறது. அதுவும் திருப்பதியில் இருந்து வேலுார் அல்லது திருப்பத்துார் செல்லும் பஸ்கள் அனைத்துமே பழைய பஸ்களாக காட்சியளிப்பதால் பல பயணிகள் இதில் ஏறி அமர தயக்கம் காட்டுவதால் அவர்களுக்கு நேரம் தள்ளிக்கொண்டே போகிறது. ரூ. 150 கட்டணத்தினை பெறும் தமிழக போக்குவரத்துகழகம் நல்ல நிலையில் இயங்க கூடிய புஷ்பேக் சீட்டு கொண்ட பஸ்களை விடக்கூடாதா? ஏதோ எங்கேயோ பல நாட்கள் ஓடிக் களைத்த பஸ்களை மட்டுமே திருப்பதிக்கு அனுப்புவதேன் என கேள்வி எழுப்புகின்றனர். அந்த பஸ்களைப் பார்த்தால் பாதியிலேயே நின்றுவிடுமா? என இக்கால இளைஞர்கள் சந்தேக கேள்வி எழுப்புவது தொடர்கதையாகி வருகிறது.

public request more no of buses to tirupati


திருப்பதி- திருப்பத்துாருக்கு இயக்கப்படும் பாடாவதி பஸ்....மேலே பிளைவுட் உடைந்தும், லக்கேஜ் கேரியரின் ரெக்சின் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது...அதிகாரிகள் கவனிப்பார்களா?

public request more no of buses to tirupati

ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்துமே பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதால் நம்முடைய தமிழக மக்களே இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில் அந்த பஸ்களை நோக்கியே படையெடுக்கின்றனர். நம்ம கண்டக்டர் திருப்பதி, வேலுார் என கூவிக்கொண்டிருந்தாலும் யாருமே திரும்பி பார்ப்பதில்லை. எனவே போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தயவு செய்து திருப்பதிக்கு செல்லக்கூடிய பஸ்களை நல்ல பராமரிப்பு மேற்கொள்வதுடன் பாடாவதி பஸ்களை வேறுபக்கம் திருப்பி விட்டுவிட்டு நல்ல புதிய பஸ்களை இயக்க வேண்டு கோள் விடுக்கின்றனர்.

இதுகுறித்துபாதிக்கப்பட்ட பக்தர்கள் கூறும்போது, நாங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு பஸ்சில்தான் சென்றோம். வேலுாரில் இருந்து திருப்பதி செல்லும்போதும் நல்ல கன்டிஷனான பஸ் இல்லை. நாங்கள் பயணம் செய்த பஸ்சின் உட்புற மேற்கூரையில் அவ்வளவு அழுக்கு தொங்கிக்கொண்டிருந்தது. பயணக்கட்டணம் ரூ. 150 என வசூலிக்கும் போக்குவரத்துதுறை பக்தர்கள் வெகுசிரத்தை எடுத்து திருமலைக்கு செல்ல வருகின்றனர். அவர்கள் முகம் சுளிக்காத வகையில் நல்ல கன்டிஷனான பஸ்களை இயக்க வேண்டும். அதுவே ஆந்திர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்துமே வெகு சுத்தமாக காட்சியளிப்பதோடு அமரும் இருக்கைகளும் அழகாக காட்சியளிப்பதால் பலர் அதற்கு படையெடுத்துவிடுகின்றனர்.

public request more no of buses to tirupati


வேலுார் புதிய பஸ்ஸ்டாண்டில் திருப்பதி பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் (கோப்பு படம்)

public request more no of buses to tirupati

நம் தமிழக பஸ்களில் ஒரு சீட்டுக்கும் மறுசீட்டுக்கும் உள்ள இடைவெளி குறுகியதாக இருப்பதால் கால் வலி அதிகம் ஏற்படுவதாக எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லக்கேஜ் வைக்கும் கேரியரின் அடிப்பகுதி ரெக்ஸின் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. மேலே உள்ள பிளைவுட் பிளந்து காணப்படுகிறது. மற்ற மாநில எல்லையைக் கடக்கும் தமிழக பஸ் இந்த லட்சணத்தில்தான் பயணம் செய்ய வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு மூன்றரை மணி நேர பயணத்துக்கு இதுபோன்ற பாடாவதி பஸ்களை அமர்த்தும் அதிகாரிகள் மீது உயரதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலம் வெகு நவீனமாக போய்க்கொண்டிருக்கிற நேரத்தில் இன்னும் நம் தமிழக போக்குவரத்துதுறை அதற்கு தகுந்தாற் போல் அதாவது பயணிகளின் ரசனைக்கேற்ப பஸ்களை ரூட்களில் விட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!