லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள திருச்சுழியூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபிரபாகரன். இவர் நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காட்பாடி ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு ஆந்திரா செல்ல பர்மிட் வாங்கினார். பர்மிட் வாங்குவதற்கு ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.500 என சோதனைச் சாவடி ஊழியர் ரூ.2.500 லஞ்சமாக கேட்டுள்ளார். அந்த பணத்தை ஊழியரிடம் கொடுக்கும்போது வீடியோவை எடுத்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செல்லும்போது காட்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் என்பவர் இவர்களை மடக்கி பணம் கேட்கவே, வாக்குவாதம் செய்தனர். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டவே, பணத்தை கொடுத்து, அதனை வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த இரண்டு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது பல்வேறு இடங்களில் வைரலானது. இதனை பார்த்த வேலூர் எஸ்பி செல்வகுமார் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu