100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வண்ணக்கோலம்

100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வண்ணக்கோலம்
X
கரிகிரி கிராமத்தில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வண்ணக்கோலம் வரைந்து மகளிர் குழுவினர் அசத்தல்.

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மகளிர் திட்டம் சார்பில் கரிகிரி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இக்கோலத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தவறாமல் வாக்களிப்போம் என்று வாசகத்தில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் 100% வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி சிறுவர் சிறுமியர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையடுத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் உதவி திட்ட அலுவலர் வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!