காட்பாடியில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு 10 டன் வைக்கோல் வழங்கப்பட்டது

காட்பாடியில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு 10 டன் வைக்கோல் வழங்கப்பட்டது
X

வேலூரில் ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் வண்டி இழுக்கும் மாடுகளுக்கு கால்நடைத்துறை 10 டன் வைக்கோல் வழங்கியது

வேலூரில் ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் வண்டி இழுக்கும் மாடுகளுக்கு கால்நடைத்துறை 10 டன் வைக்கோல் வழங்கியது

வேலூர் மாவட்டத்தில் கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் வருவாய் பெற்று வந்த அவர்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வளர்க்கும் காளை மாடுகளுக்கு உணவு வழங்க முடியாமல் இருந்தனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் சென்றது. அவர் வேலூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா செல்வத்திடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மாட்டுவண்டி தொழிலாளர்களின் 50 மாடுகளுக்கு 10 டன் வைக்கோல் வழங்க முடிவு செய்தார். அதன்படி முள்ளிபாளையம், சேண்பாக்கம், கல்புதூர், காட்பாடி பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 10 டன் வைக்கோல் பிரித்து வழங்கப்பட்டது.

இதேபோல குதிரை வைத்துள்ள குதிரை தொழிலாளர்களுக்காக 700 கிலோ கோதுமை தவிடும், தெருநாய்களுக்கு உணவளிக்க 500 கிலோ அரிசியும் அனுஷா செல்வம் வழங்கினார். அப்போது கால்நடைத்துறை உதவி இயக்குனர் அந்துவன் உடன் இருந்தார்.

கால்நடைகளுக்கு உதவி செய்ய விரும்புவோர் மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை தொடர்பான உதவி தேவைப்படுவோர் 9486963673 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!