காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு

காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதி

காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு. அவர்கள் வளர்த்த மாடும் பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அடுத்த உள்ளி புதூர் பகுதியில் திருமணமாகி ஒரு வருடம் ஆன ஜெயபிரகசம்(32) அவருடைய மனைவி அஸ்வினி ஆகியோர் நேற்று இரவு அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள வயல் வெளியிலிருந்து அவர்கள் வளர்க்கும் மாட்டினை அழைத்துவர சென்றனர்.

இரவு முழுவதும் அவர்கள் வரவில்லை. இந்த நிலையில் காலையில் வயல் வெளியில் தம்பதிகள் இருவரும் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இறந்து கிடந்தனர் அருகில் மாடும் இறந்து கிடந்தது.

இருவர் உடலையும் கைப்பற்றி திருவலம் போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!