காட்பாடி தாலுகாவில் 23 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

காட்பாடி தாலுகாவில் 23 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்
X
கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

காட்பாடி தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் அடிப்படையில் தற்போது 23 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் தலையாரம்பட்டுக்கும், தாராபடவேடு கோபிநாதன் முத்தரசிகுப்பத்துக்கும், விண்ணம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் குண ராஜன் மேல்பாடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல்பாடியில் பணியாற்றிய பிரியதர்ஷினி வெப்பாலைக்கும், அங்கு பணியாற்றிய சின்னசாமி பெருமாள்குப்பத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் செம்பராயநல்லூருக்கும், அங்கு பணியாற்றிய மேகலா சேனூருக்கும், சேனூரில் பணியாற்றிய திலீப்குமார் அம்முண்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஷீலா மகிமண்டலத்துக்கும், அங்கு பணியாற்றிய அருண் தெங்காலுக்கும், அங்கு பணியாற்றிய பரத் பரமசாத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரிமுத்துமோட்டூர் கிராமத்தில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் வண்டறந்தாங்கல் கிராமத்திற்கும், முத்தரசி குப்பம் கிராமத்தில் பணியாற்றிய விஜயா விண்ணம்பள்ளிக்கும், தலையாரம்பட்டு கிராமத்தில் பணியாற்றிய வெங்கடேசன் வஞ்சூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் காட்பாடிக்கும், கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் வள்ளிமலைக்கும், கொடுக்கந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் கழிஞ்சூருக்கும், அம்மவார்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் தாராபடவேடுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பரமசாது கிராம நிர்வாக அலுவலர் கோமதி திருவலத்திற்கும், அங்கு பணியாற்றிய ஜோதீஸ்வரன் இளையநல்லூருக்கும், அங்கு பணியாற்றிய சரண்யா கொடுக்கந்தாங்கல் கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேயநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் நிவேத குமாரி கரசமங்கலத்துக்கும், அங்கு பணியாற்றிய பவிதா காங்கேயநல்லூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பணியிட மாறுதல் உத்தரவை வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!