பல்வேறு சாதனை புரிய வாய்ப்பு- துரைமுருகன்

பல்வேறு சாதனை புரிய வாய்ப்பு- துரைமுருகன்
X

மீண்டும் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனை புரிய கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். தேர்தலில் திமுக வெற்றி பெறும் என காட்பாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் காட்பாடி வந்த துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 10 வது முறையாக போட்டியிட தி.மு.க பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அறிவிக்கப்பட்டதை அடுத்து இரயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு திமுகவினர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து பலத்த வரவேற்பு அளித்து பேரணியாக சென்று சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அண்ணா சிலை, பெரியார் சிலை ஆகியவற்றிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.

மீண்டும் என் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளைப் புரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக இதை கருதுகிறேன். தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மும்முனை போட்டியா என்பதை எல்லாம் நாங்கள் கருத்தில் கொள்வதில்லை. திமுக தான் வெற்றி பெறும். காட்பாடியில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டுவேன், தொழில் பேட்டையை அமைத்து அங்கு காட்பாடி தொகுதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்று தருவேன் என கூறினார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு