எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்

எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்
X

காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி தூக்கி வீசியதில் ஐந்து பேர் படுகாயமடைந்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்புதூர் பகுதியில் இன்று (பிப்-28) எருதுவிடும் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் எருதுவிடும் திருவிழாவை காண குவிந்தனர். தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூ. 90,000, மூன்றாம் பரிசாக ரூ. 80,000 என 55 பரிசுகள் வழங்கப்பட்டன. காளை மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டு 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்