கே.வி.குப்பம் தொகுதி அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டம்.

கே.வி.குப்பம் தொகுதி அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டம்.
X
கே.வி.குப்பம் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க கோரி 3-வது நாளாக அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டம்.

வேலூர் மாவட்டம். கே.வி.குப்பம் தனி தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதத்திற்கும் ஒதுக்கியதை கண்டித்தும். தற்போது அங்கு அதிமுகவை சேர்ந்த லோகநாதன் என்பவர் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் மீண்டும் இத்தொகுதியை அதிமுகவுக்கே ஒதுக்கி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கோரியும் கடந்த 2 நாட்களாக அதிமுக தொண்டர்கள் போராடிய நிலையில் இன்று 3 வது நாளாக கே.வி.குப்பம் அடுத்த வடுங்கன்தாங்கள் பகுதில் அதிமுக தொண்டர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் பேரணியாகவும் சென்று எதிர்பு தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!