கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கலில் சலசலப்பு

கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர்  வேட்புமனு தாக்கலில் சலசலப்பு
X
கே.வி.குப்பம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கலில் மரியாதை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கே.வி.குப்பம் (தனி) தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்(தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுவை கே.வி.குப்பம் தாசில் தார் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பானுவிடம் வேட்புமனுவை வழங்கினார்.

வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ லோகநாதனின் ஆதரவாளர்கள் பூவை ஜெகன் மூர்த்தியை அழைத்துள்ளனர். ஆனால், அவர் போகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தற்போதையை அதிமுக எம்.எல்.ஏ லோகநாதனுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி எம்.எல்.ஏ லோகநாதனின் ஆதரவாளர்கள்,லோகநாதனை பூவை ஜெகன் மூர்த்தியுடன் போகக்கூடாது என கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து எம்.எல்.ஏ லோகநாதன், அவரது ஆதரவாளர்களை சாமாதானப்படுத்தினார். இதையடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

கே.வி.குப்பம் தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதத்திற்கு ஒதுக்கியதை கண்டித்தும், கே.வி.குப்பம் தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கக் கோரியும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான ஆரம்பத்திலேயே அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil