வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம் ரத்து

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம் ரத்து
X
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்படி மறு உத்தரவு வரும் வரை குறைதீர் முகாம் ரத்து செய்யப்படுகிறது

வேலூர் மாவட்டத்திலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட தகவல்: வேலூர் மாவட்டத்திலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.மேலும் ,பொதுமக்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் அளிக்கப்பட்ட வேண்டிய கோரிக்கை மனுக்களை அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார் .

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!