15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்
வேலூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஷி, சீனிவாசன், ஜெயகாந்தன், சத்திய குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.மாநில துணைத்தலைவர் இளங்கோ துவக்க உரையாற்றினார். சேகர், ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை அறிவித்து நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்திலும், சிறப்பு காலமுறை ஊதியத்திலும் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கூறினர்
மேலும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி, கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறை கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு மற்றும் கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையில் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்
இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு வழங்க வேண்டும்.
சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, ஆசிரியர், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 42 மாதபணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu