வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
X

பைல் படம்.

மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று (வியாழக்கிழமை) சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 8 மாவடங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!