வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைப்பு

வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை  தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைப்பு
X

வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை சென்னையிலுள்ள பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட் என்ற தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.

வேலூர் அடுத்த காகிதப்பட்டறை பின்புறம் உள்ள கால்வாய் அருகே 17.01.2022 அன்று ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது

வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை சென்னையிலுள்ள பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட் என்ற தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.

வேலூர் அடுத்த காகிதப்பட்டறை சென்னை சில்க்ஸ் துணிகடையின் பின்புறம் உள்ள கால்வாய் அருகே 17.01.2022 அன்று ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ,வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உரிய பராமரிப்பு சிகிச்சை முடிந்து,இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ .குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் ,வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்.உமாமகேஸ்வரி, திருமதி.சு.மேரி உறுப்பினர் குழந்தைகள் நலக்குழுமம் மற்றும் நன்னடத்தை அலுவலர் அ.செல்வி ஆகியோர் மூலம் சென்னையிலுள்ள பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட் என்ற தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!