குடியாத்தம் அருகே சூதாட்டத்தால் நேர்ந்த விபரீதம்: இளைஞர் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சூதாட்டத்தால் நேர்ந்த விபரீதம்:  இளைஞர்  உயிரிழப்பு
X
சூதாட்டத்தின்போது போலீஸ் வருவதாக நினைத்து கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு. தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு கல்லூரி பின்புறம் காலி இடத்தில் நேற்று இரவு சட்ட விரோதமாக சூதாட்டம் விளையாடிய இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வருவதை கண்டு காவலர் வருவதாக நினைத்து அச்சமடைந்து இருளில் ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்த சிவக்குமார் என்பவர் உயிரிழப்பு.

குடியாத்தம் சாமியார் மலைப்பகுதியை சேர்ந்த சிவக்குமார் கட்டிட வேலை செய்பவர். திருமணமாகி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் தினமும் இரவில் மறைவான இடத்தில் சூதாட்டம் விளையாடுவது வழக்கமாக வைத்திருந்தார்.

இதே போல் நேற்று இரவும் சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்த போது, அங்கு இருசக்கர வாகனம் ஒன்று வருவதை கண்டு அனைவரும் பயத்தில் ஓடிய போது அங்கு இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறியாத நண்பர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

காலை பொழுதாகியும் தனது கணவர் வீடு திரும்பாததால் நண்பர்கள் மூலம் தேடியுள்ளனர். அப்போது கினற்றில் அவரது காலணி மிதப்பதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்து சிவக்குமாரின் சடலத்தை மீட்டனர். பின் காவல்துறையின் உதவியுடன் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!