ரூ.200க்காக குடும்பத்துடன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த தொழிலாளி
குடும்பத்தினருடன் கால்வாயை சுத்தம் செய்யும் தொழிலாளி
குடியாத்தத்தில் 200 ரூபாய் கூலிக்காக பாதுகாப்பு உபகரணங்களின்றி குடும்பத்தினருடன் தொழிலாளி ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப் பேட்டை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலகம் உள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் உள்ள கால்வாய்களில் செல்கிறது . குடியாத்தம் போலீஸ் நிலையம் அருகே செல்லும் 7 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் 18 வயது மகள், 4 வயது மகனுடன் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் எஸ்ஐ சிலம்பரசன் அங்கு சென்று விசாரித்தார். தொழிலாளி தனது குடும்பத்தினர் வயிற்றுப்பிழைப்புக்காக 200 ரூபாய்க்கு இப்பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதற்கு எஸ்ஐ பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கால்வாயில் இறங்கி இதுபோன்று செய்யக் கூடாது ' என அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து தொழிலாளியை கால்வாயில் சுத்தம் செய்யும்படி கூறியவர்கள் யார்? என குடியாத்தம் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu