குடியாத்தம்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

குடியாத்தம்; ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
X

Vellore News.Vellore News Today- குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆலோசனை (கோப்பு படம்)

Vellore News.Vellore News Today-குடியாத்தத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

Vellore News.Vellore News Today- குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் மம்தாஇமகிரிபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் என்.மோகன், பி.கே.குமரன், லாவண்யாஜெயபிரகாஷ், ஜெயபாரதி, ரமேஷ், பாபு, லோகேஸ்வரி, முனிசாமி, குமரன், அகிலாண்டேஸ்வரிபிரேம்குமார், சுந்தர், உமாபதி, பரந்தாமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.திருமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு செய்வது குறித்த திட்டங்கள் ஒலக்காசி, கொத்தகுப்பம், சின்னதோட்டாளம், பட்டு, செம்பேடு ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், அந்த பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்துவது குறித்தும், ஊராட்சிகளில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா